மலரின் மறு பெயர் துர்கா

தோட்டக்காரர்களுக்கு துர்கா பூ
வேட்டைகாரர்களுக்கு துர்கா மான்
வெயிலில் துர்கா ஐஸ்கிரீம்
குளிரில் துர்கா இளநீர்
அதிகாலையில் துர்கா பனித்துளி
அந்திவேளையில் துர்கா சிம்பொனி
ஏழைகளுக்கு துர்கா புதையல்
எதிர்பாராதோருக்கு துர்கா லாட்டரி
வறட்சியில் துர்கா மழை
கோயிலில் துர்கா சிலை
சோகத்தில் துர்கா மகிழ்ச்சி
சொப்பனத்தில் துர்கா தேவதை
அரண்மனையில் துர்கா அரசி
அழுக்கு உடையிலும் துர்கா அழகி
மனதில் துர்கா வெள்ளை
சிரித்தால் துர்கா முல்லை