அது ஓர் கனாக் காலம்! அது என்றும் கல்லூரிக் களம்!

பட்டம் பறிக்கும் பட்டுப்பூச்சிகளாய் கூட்டமாய் கூடும் சிட்டுக் குருவிகளாய் சுட்டித் தனமான லூட்டிகளுக்கு குறைவு ஏதும் இல்லை வெட்டித்தனமான வேலைகளுக்கு பஞ்சம் ஏதும் இல்லை கட் அடித்து மாட்டிக் கொண்டோம் பிட் கொடுத்து பிழைத்துக் கொண்டோம் First லவ்விலே தோற்றுப் போனோம் இருப்பினும் Sight அடித்து தான் தேற்றிக் கொண்டோம் திட்டி திட்டித் தீர்த்துக் கொண்டோம் குட்டிச் சண்டைகள் போட்டுக் கொண்டோம் சிங்கிள் டீயும் பகிர்ந்து கொண்டோம் துட்டு முழுவதும் ட்ரீட்டில் கரைத்தோம் ஆண் பெண் நட்பை தாய் சேய் உறவைப் போல் எண்ணினோம் தொட்டுப் பேசி திரிந்தோம் தூய்மை கெடவும் இல்லை கட்டியணத்து புரண்டோம் கற்பு கெடவும் இல்லை இருபால் நட்பைச் சொல்ல இருவரி குறள் போதவில்லை விட்டுக் கொடுப்பதே விருப்பம் இதில் தியாகம் ஏதும் இல்லை தோள் தட்டிக் கொடுப்பதே பழக்கம் இதில் புழக்கம் ஏதும் இல்லை கள்ளமில்லை கபடமில்லை உள்ளத்தில் ஊழலுமில்லை இவையெல்லாம் இன்றும் போவதிற்கில்லை. அது ஓர் கனாக்காலம் அல்லவா..

எழுதியவர் : ரா.வினோத் (10-Mar-12, 1:12 pm)
பார்வை : 405

மேலே