மெல்லத் தமிழ் இனி செத்துவிடும்

யாழ் மீட்டிய கவிஞர்கள்
நேற்றோடு போயினர்
இன்னிசைபாடிய இலக்கியத் தமிழ்
ஏட்டோடு நின்று போயிற்று
இலக்கிய ஓடையும் நதியும்
ஓய்ந்து காய்ந்து கிடக்கிறது
ஒற்றை வார்த்தையும்
உரைநடை குப்பையும்
ஈயத்தை பார்த்து இளிக்கும் பித்தளையும்
பொற்தமிழ் வீதியில் புன்னகை பூத்து
கழைக் கூத்தாடுது களிநடம் புரியுது
வான் புகழ் வள்ளுவனை
விருத்தம் ஆயிரம் ஆயிரம் கொண்டு
காவியம் பாடிய கம்பனை
இன்பாக் கொண்டு வெண்பா புனைந்த
ஓங்கு புகழ் புகழேந்தியை
புரட்சிக்கு வித்திட்டு புதுமை
கவி யாத்த முறுக்கு மீசை
புரட்சிக் கவிஞன் பாரதியை
அவன் சீடன் பாவேந்தன் பாரதிதாசனை
திரைப் பாடலை கவிச் சோலை ஆக்கிய
எனதருமை கவின் கண்ணதாசனை
இனி எங்கு காண்பேன்
அன்னையே ஒருமுறை ஒரேஒருமுறை
அவர்களை இங்கே அனுபபிவிடு
நற்றமிழ் இங்கே வாழட்டும்
இன்றேல் மெல்லத் தமிழ் இனி செத்துவிடும்
அன்னையே
மெல்லத் தமிழ் இனி செத்துவிடும்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-12, 5:31 pm)
பார்வை : 218

மேலே