என்னவள் என்னிடம் சொன்னது..
பார்த்த உடனே காதல் வருமா,
அந்த காதல் நிலைபெறுமா?
என் கண்கள் உன்னிடம் பேசி இருந்தால்,
மன்னிப்பு கோருகிறேன்....
என் இமைகளை வைத்து அதனை கண்டிக்கிறேன்!
நட்பாய் பழகு அதுதான் உனக்கு அழகு,
பகிர்ந்துகொள் பலவற்றை, அதிலே
தெரிந்து கொள்வேன் சிலவற்றை...
எனக்கு நீ பொருத்தம் என்றால்,
விடை கொடுப்பேன் நட்புக்கு,
குடை பிடிப்பேன் நம் காதலுக்கு!!!!!!