அம்மாவுக்கு அன்புமகள் எழுதுவது !

அம்மா நீ எனக்கு
ஆண்டவனுக்கும் மேல்
அவன்
கடந்த காலம் !
நீயோ நிகழ்காலம் !!.
உன் இளைத்த
மார்பிலும்
ஈரமிருக்கும் !
என் பசித்த வயிறுக்கு
பாலும் சுரக்கும்.
அம்மா நீ
இயற்கையிலும்
இயற்கை !!
என் விழி நீர்
கண்டால்
உன் உயிர் நீர்
தகிக்கும் !!
எனக்காக
நீ நடப்பாய்
எதற்கெல்லாமோ ?
எனக்கு தெரியாது .
எனக்காக
நீ துடிப்பாய்!.
தினம் தினமும்
கணக்கில்லாமல்.
உன் வாழ்வை
தொலைத்து விட்டு
என் வாழ்வை
தேடுவாய்.
தேடி களைத்த
பின்னும்
தூங்காமல்
ஏங்குவாய்.
அதனால் நீ எனக்கு
எப்போதும் நிகழ் காலம் .
உன்னைப்போல்
நானிருப்பேன்
அம்மாவாக
வருங்காலம் .
இப்படிக்கு
அன்பு மகள்.