பிழை திருத்தப்பட்ட கவிதை
பிழை
என்ன சொல்வதென்று
தெரியவில்லை எனக்கு
அவள் என்னிடம் பேசியதிலிருந்து!
என்ன செய்வதென்று
தெரியவில்லை என்னக்கு
அவள் என்னை பார்த்ததிலிருந்து!
என்ன எழுதுவது என்று
தெரியவில்லை எனக்கு
அவள் எழுதிய கடிதத்திற்கு!
திருத்தப்பட்ட கவிதை
என்ன சொல்வதென்று
தெரியவில்லை எனக்கு
என் ஆசிரியை என்னிடம் வினவிய
வினாவிற்கு!
என்ன செய்வதென்று
தெரியவில்லை எனக்கு
நான் கையும் களவுமாக
மாட்டிகொண்ட பிறகு!
என்ன எழுதுவது என்று
தெரியவில்லை எனக்கு
என் ஆசிரியை கொடுத்த
வினாத்தாளிற்கு!