"அம்மா"
ஒரு கவிதை போட்டி..
தலைப்பு என்னவென்றால் ..
மிகச் சிறியதாய் ஒரு கவிதை
எழுத வேண்டும் என்பது தான்..
எழுதினேன் - "அம்மா" என்று.
அதை விட இன்னும் சிறியதாய்
எழுதியிருப்பேன். "நீ" என்று.
எழுத சொன்னது என் தாயாக இருந்திருந்தால்...
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.