பிடித்த நிறம் கருப்பு
உனக்கு பிடித்த மலர் எது?
அரளிப்பூ
ஏனென்றால் மணம் வீசி மனம் மயக்கி
பின் வாடி விடும் மற்ற மலர்களின்
சாகச வேலை இதனிடம் இல்லையே........
உனக்கு பிடித்த மனிதர் யார்?
குழந்தை,
அதற்குதான் அழகு பார்த்து
உருவம் கண்டு அன்பு செலுத்தும்
வன்ம மனம் இல்லை,........
உனக்கு பிடித்த நிறம் எது?
கருப்பு
ஏனெனில் உலகின்
சூன்யமே அதுதான் என்று உணர்த்துவதால்
உனக்கு பிடித்த நட்பு எது?
எதிரியின் நட்பு
காரணம்
அவர்களிடம் நட்பு கொண்ட பின்தானே
இந்த சமூகத்தின் சூழ்ச்சியை அனுபவத்தில்
கண்டு கொள்ள முடிந்தது
உனக்கு பிடித்த செயல் எது?
தோல்வி
இதை என் வாழ்வில் கண்ட பின்தானே
இன்னும் ஜெயிக்க வேண்டும்
என்ற வெறி என்னுள் வந்தது
இத்தனை வினாக்களுக்கும் காரணம்?
சுய அலசல்
இத்தனை விடைகளுக்கும் காரணம்?
என் மனதை குத்தி.......
கிழித்து.......
ரணமாக்கி.....
வேடிக்கை பார்த்து மகிழும் இந்த சமூகம்................