கிரேட்லேக்ஸ்சில் நியூயார்க்
சில நிகழ்சிகள் நடந்து முடிந்த பின்பும் அதனுடைய தாக்கம் மனதை விட்டு அகல வெகு நேரமாகிவிடும்.அப்படி ஒரு இனிமையான தாக்கத்தையும், பல நாள் நினைத்து அசைப்போட தேவையான சாரத்தையும் விட்டுப் போயிருக்கிறது.கடந்த வாரம் கிரேட்லேக்ஸ் மேலாண்மை பள்ளியில் நடைப்பெற்ற ஒரு நிகழ்வு.
ஒரு காலத்தில் நியுயார்க் நகரம் என்ற பெயரை கேட்பதற்கே ஆச்சர்யப்பட்டவர்கள் நாம், ஆனால் இன்று யாருமே எண்ணிப்பார்க்க முடியாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது இந்தியாவின் வளர்ச்சி.நம்மையும் நம் திறமைகளையும் அறிந்துக்கொள்ள பல நாட்டவர்கள் இங்கு வருகை புரிகின்றனர்.இந்திய மாணவர்களின் திறமையை கண்டு வியந்து இவர்களுடன் நம்மால் போட்டியிட முடியுமா என்று பல நாட்டு மாணவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
நியுயார்க் 'பேஸ்' பல்கலைகலகத்திலிருந்து பேராசிரியர் திரு.பி.வி.விஸ்வநாத் அவர்கள் வழிநடத்த, பேஸ் பல்கலைகழகத்தில் சிறிய பொருளாதாரத்தை(Micro Economics) பயிலும் 11 மாணவ ,மாணவியர் இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா வந்திருக்கின்றனர். ' ‘பொன்னியின் செல்வன்' படித்தால் போதும் அதில் மேலாண்மை கல்வியையும் அதன் நுணுக்கங்களையும் சுலபமாக புரிந்துக்கொள்ளலாம் என்று பேராசிரியர் திரு.பி.வி.விஸ்வநாத் அவர்கள் கூறுகிறார். இக்கூற் லிருந்து அவர் தமிழன் என்பது தெளிவாக புரியும்.
கிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளியின் தனித்தன்மை வாய்ந்த திட்டமாக விளங்கும் கர்மயோகாவின் வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு அதனைப்பற்றி அறியும் ஆவலில் பேஸ் பல்கலை கழக மாணவர்கள் க்ரியட்லேகேஸ் வளாகத்திற்கு வருகை புரிந்தனர். .கர்மயோகா மாணவர்களின் சேவையை பெற்று கொண்டிருக்கும் 2௦ கிராமங்களில் ஒன்றான புதுப்படினம் கிராமம் பற்றியும் ,அக் கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக செயல்படுத்தியுள்ள திடங்கள் பற்றியும் மாணவர் மனோதேஜ் படகாட்சிகளுடன் விளக்கினார்.
புதுப்பட்டினம் கிராமத்திலுள்ள 'ஹோப் பவுண்டேசன் , பள்ளியை சேர்ந்த 20 திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டு அரங்கத்தை குதூகலமாக்கினர். கிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளிக்குள் நுழைந்ததையே ஆச்சர்யமாக நினைத்த குழந்தைகள் ,பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுடன் உரையாடியதில் மேலும் பிரமிப்படைந்தனர்.
மீனவ குடும்பத்தில் பிறந்து , பள்ளிக்கு செல்வதே அரிது என்ற சூழலில் வளர்ந்த குழந்தைக்கு , தான் பழகிய மக்களுக்கு மத்தியில் தனித்து நின்று தமிழில் பேசுவதே கடினமான ஒன்று ,இந்த சூழலில் வளர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி உலக தரம் வாய்ந்த மேலாண்மை பள்ளியில் , அமெரிக்க மாணவர்களுக்கிடையே ஆங்கிலத்தில் பேசியதை அவள் வாழ் நாள் முழுவதும் பேசி மகிழ்வாள். அவள் பேசியதில் பொருள் இருந்ததா , இலக்கணம் இருந்ததா என்றெல்லாம் ஆராயாமல்,மைக் பிடித்து பேசிய அவள் தைரியதிற்காகவே அவளை பாராட்ட வேண்டும்.
'ஹோப் பவுண்டேசன்' பள்ளியின் தாளாளர் புதுபட்டினம் குப்பத்தில் வசிக்கும் மக்களின் பண தேவையையும், வட்டியில்லாமல் அவர்களுக்கு பணம் கடனாக கொடுத்து,அந்த பணத்தை திரும்ப செலுத்தினால் இருமடங்காக கடன் தரும் திட்டதைப்பற்றியும் விளக்கினார்.
ஜப்பான் ,சீனா ,அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பல நாட்டு மாணவர்கள் பேஸ் பல்கலைக கத்தில் பயில்கின்றனர்.பல நாடுகளின் பிரதிபலிப்பாக, ஒரே மேடையில் அவர்கள் காட்சி தந்தது காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
ஜப்பான் ,சீனா ,அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பல நாட்டு மாணவர்கள் பேஸ் பல்கலைகழகத்தில் பயில்கின்றனர்.பல நாடுகளின் பிரதிபலிப்பாக, ஒரே மேடையில் அவர்கள் காட்சி தந்தது காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள கர்மயோகா கிராமமான முள்ளிக்கொளத்தூர் பள்ளியின் 2 ஆசிரியைகளும் வந்திருந்தனர்.
அயல் நாட்டு மாணவி நம் கலாசாரத்தை மதிக்கும் வகையில் சேலை அணிந்து வந்திருந்தார்.சேலை உடுத்த தெரியாவிட்டாலும் நம் கலாச்சாரத்தை மதிக்கவேண்டுமென்று நினைத்த அப் பெண்ணின் பண்பிற்கு தலை வணங்க வேண்டும் .
கிரேட் லேக்ஸ் , பேஸ் பல்கலைகழகம் இருதரப்பு மாணவர்களும் இணைந்து கேள்வி பதிலுடன் கலந்துரையாடி,கருத்துக்களை பகிர்ந்துகொண்டு , நினைவு பரிசை பரிமாறிக் கொண்டு, விருந்துண்டு, அவர்கள் விடைபெற்று செலும்போது வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் விடைபெறும்போது இருக்கும் வருத்தம் கிரேட் லேக்ஸ் முழுவதும் பரவியிருந்தது.