போடா போ ! சோற்றுப் பருக்கையே !
வானத்தில் பறந்திருக்கும் பறவை
ஒரு கோணத்தில் என்னைப் படம் பிடித்தால்
ஏணத்தில் கிடக்கிற பருக்கையாய்
நான் இருப்பேன் அதன் பார்வையிலே !
இந்த ஞானத்தை யான் பெறவே
மோனத்தில் மூழ்கவில்லை
தியானத்தில் ஆளவில்லை
நிதானத்தில் யோசித்தால்...
அதாவது -
"நீ உன்முன் எதிர்ப்படும் பொருளின்
உட்பொருளாய் மாறி நிற்கும்
மாயம் கற்றால்,"
இந்தச் சிந்தனையின் சிக்கல்
மணலில் விழுந்த பொடிக் கல்!
போடா போ !
பொழுதெல்லாம் 'நான்' என்னும்
ஆணவத்தைக் கொண்டு திரிபவனே!
நீ ஏணத்தில் கிடக்கும் பருக்கை
போடா போ !