படிகள்
பத்து மாதம் சுமந்து
பத்தியம் இருந்து..
உள்ளிருந்து உதைத்த உதைகளை
வெளியில் சொல்லி வெக்கப்பட்டு..
மகிழ்ந்தவளே....மனம் குளிர்ந்தவளே...
கருவறையில் இருந்தபோதே.......
தலைகோதி விளையாடிய...
தாய் என்ற தோழி நீ..
வலிகளை வரமென பொருத்து
உதைகளை பரிசென பகிர்ந்தாயே
காலத்தின் வேகத்தில்
கடவுள்தந்த முதல் தோழியே...
ஊரார்கண் கழுகு கொத்திசெல்லாமல்
உள்ளே அணைத்து காத்த கோழியே..
தோள் மீது தூங்கவைத்து
தோழியாகிறாய்......
தஞ்சமென புகும் போது
தாயாகிறாய்...........
கேளாமளே வரம் தந்து
கடவுளகிறாய்........
மலம் அள்ளி மடிமீது கிடத்தி
மார்பிலே அணைத்த கரங்கள்
முடிகோதி முகம்துடைத்து
குளிக்க வைத்த கரங்கள்
வாழ்க்கை பாதையில்..
படிகல்லாகி படிந்து
ஏற வைத்த
ஏற்றி விட்ட
நான் ஏறி வந்த
படிகட்டுகள்....