காத்திருக்கிறேன் ........

எதையும் யாரிடமும்
யாசகம் கேட்டு
பழக்கமில்லை
எனக்கு.
உன்னை நேசித்தபின்
உன்னை
உன்னிடம் யாசிப்பதற்கு
எத்தனை ஆண்டுகள்
எண்ணிப் பார்க்கையில்
எனக்கே பெருவியப்பாய்.
எளிதில் மறுத்துவிட்டாய்
அன்பை யாசித்து
பெற முடியாதென
உணர்த்திவிட்டாய் .
காத்திருக்கிறேன்
உனக்காக அல்ல.
உன் நினைவுகள்
என் மனதை விட்டு
அகலும் வேளைக்காக.......
-பாரதி கண்ணம்மா

எழுதியவர் : பாரதி கண்ணம்மா (31-Mar-12, 10:17 pm)
சேர்த்தது : பகவதிமணிவண்ணன்
Tanglish : kaathirukiren
பார்வை : 222

மேலே