அரசியல் வியாதி

முதிர்ந்த இலைகளே
உதிர்ந்து விட வேண்டியது தானே!
ஏன் இப்படி ஒட்டியிருந்து
அரசியல் நாற்காலிகளை
அழுக்காக்குகின்றீர்கள்!

நான் என்ன நாடக மேடையா
ஏன் என்னில் நடித்து கொண்டிருக்கின்றீர்கள் என்று
என் நாடு உன்னிடம் கேட்டிருக்கும்
அதற்கு நாவிருந்திருந்தால்!!

உன் இலவசங்கள் எனக்கோ
காலம் கடந்து தாக்கும் விசம்!
உன் வாக்குறுதிகளோ என் பையில்
பாவப்பட்டாதாய் தூங்கும் செல்லா காசுகள்!

என்ன செய்வேன்
நீதான் என்ன செய்தாய்

சலவையான
உடுப்பிற்கும் பித்தான் இல்லாத நிலைதான்
என் நிலை!!!


காதிற்கு வாக்குறுதிகளை தந்து செவிடாக்கினாய்
பொறுத்து கொண்டேன்
கண்ணிற்கு காசினை காட்டி குருடாக்கினாய்
பொறுத்து கொண்டேன்

வயிறென்ன செய்தது உன்னை
வற்ற வைத்து விட்டாயே
பாவி பசி நேய் பிடித்தது எனக்கு
பாவம் அரசியல் வியாதி பிடித்தது என் நாட்டிற்கு!!

எழுதியவர் : சுதாகண்ணன் (3-Apr-12, 7:15 pm)
பார்வை : 144

மேலே