தீராக் காதல்

அழகை
அழகாய் ரசிக்கும்
அழகிய காதலன்!

தீராத என்
காதலை திகட்ட திகட்ட
பருகியவன்!

மாறாத அவன் காதல்
மாறும் இவ்வுலகிற்க்கொரு
சிம்மசொப்பணம்.

நாலாறு மணியும்
நான் காணத்துடிக்கும்
அவன் முகம்!

அத்தனை நரம்புகளும்
அவன் பெயர் சொல்லவே
ஆசை கொள்ளும்!

ஓடும் ரத்தத்தில் கூட
சத்தமில்லாமல் அவன் பெயரெழுதும்
வித்தகன்!

மொத்தத்தில் காதலை
காதலிக்க தெரிந்த அழகிய
ராட்சசன்!

அவன்தான்
என் காதலன்!

எழுதியவர் : ராஜேஸ்குமார் (4-Apr-12, 11:14 pm)
பார்வை : 205

மேலே