நரியின் வாக்குறுதி

வாக்காளர்களே! வாக்காளர்களே!
வாக்களியுங்கள் எனக்கே
எல்லோருக்கும் என்புகைப்படம்
இலவசமாக தருகின்றேன்
விழியுங்கள் என் முகத்தில்
நல்லது நடக்கும் உங்களுக்கு
கரண்ட் கட்டா?
கவலை வேண்டாம்
மின்மினி தருகிறேன்.
வேலையில்லையா?
கஞ்சித்தொட்டி திறக்கிறேன்.
இருப்போருக்கும் இல்லாதாருக்கும்
எல்லாம் தருவேன் இலவசமாக

நாடாளும் ஆசை வந்ததால்
நாட்டுக்குள் வந்துவிட்டேன்
இங்கு இலவசமாக கொடுத்தால்
ஜெயிக்கலாம் என்றார்கள்
வந்துவிட்டேன் நம்பி
வாக்காளர்களே! வாக்காளர்களே!
வாக்களியுங்கள் எனக்கே

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (5-Apr-12, 8:45 pm)
பார்வை : 494

சிறந்த நகைச்சுவைகள்

மேலே