நான் அறிந்த பங்கு சந்தை

ஒரு நிலையில் இல்லாமல் 
நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் 
நம் மனதைப் போல !!

இரண்டாம் நிலையில் செய்யப்படும்
இந்த பங்கு வர்த்தகம்
என்னை ஒரு நிலையில் வைக்கவில்லை !!

தின வர்த்தகம் செயல் படுவது
சுமார் ஆறு மணி நேரம் தான்
அதுவே என்னை ஆட்டி வைக்கும் நேரம்!!

நான் கற்ற வணிகம்
ஊக வணிகம்
என்னால் அதை யூகிக்க முடியவில்லை !!
 
பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள முடியாதாம்
பங்கின் விலை நகர்வும் அதுபோலதான்
புரிந்துகொள்ள முடியாது
ஏற்ற இறக்கங்களும் உண்டு !!

விலை தாவிக்கொண்டே இருக்கும் 
மரத்துக்கு மரம் தாவும்
ஒரு குரங்கைப் போல!!

ஒரு பங்கை வாங்க அல்லது விற்க
தொழில் நுட்ப பகுப்பாய்வு தேவை படுகிறது
ஜாதக கணிப்பை போல!
 
யுக்திகள் பல கையாள வேண்டும்
தரவுகளை பல நேரக்கூறுகளில் ஆராய்ந்து பார்க்கவேண்டும்
க்ரஹ அமைப்பு பலன்களை பார்ப்பது போல!

எளிமை படுத்தும் மென்பொருட்கள் பல உள்ளன
அதில் சில ஆதரவு மற்றும் தடை நிலைகளை கூறும்
இது எனக்கு ஆதரவாக இருக்கும்!!!!

யுக்திகளின் ஒன்று மெழுகு வர்த்தி வரைபட முறை
எவ்வளவு உருகினாலும்
எனக்கு வெளிச்சம் புலப்பட வில்லை!!

அந்நிய படையெடுப்பும் பங்கு சந்தையை பாதிக்கும்
மற்றும் பண வீக்கம் , கச்சா எண்னை விலை.. .
பருவ மழையில் நனைய வேண்டி இருக்கும்!!
 
எருதும் கரடியும் மோதிகொள்ளும்
ஆனால் காயப்படுவது என்னவோ
மனிதன் தான் !!

ஏறுமுகம் இறங்குமுகம்
இது தான் பங்கு சந்தையின் முகம்
எனக்கு துணை அந்த ஆறுமுகம்!!






 

எழுதியவர் : panithuli (7-Apr-12, 11:31 am)
சேர்த்தது : panithuli
பார்வை : 493

மேலே