குழந்தயின் சிரிப்பில்

உன்
சின்னஞ்சிறு
மஞ்சள் ரோமங்களில்
உண்டாக்கலாம்
ஒரு கோடி வண்ணப்படம்.

நான் கொஞ்சும்
உன் விழியிரண்டை
நாவற்ப் பழம்
கொண்டு செய்தாறோ!

உன் முகம் காணும்
ஓர் நொடியில்
பல யுகம் தாண்டும்
என் உயிரும்!

பால் வாடை
பருவம் மாறா
உன் பச்சிளம் மேனியை
நான் தீண்ட
சுகம் கோடி
காண்பேனோ!

பஞ்சு பொதிந்த உன்
பிஞ்சு விரல் பிடித்து நான்
கொஞ்சி விளையாட
பல ஜென்மம் வேண்டும்!

என் வாழ்வில்
எனக்கு கிடைத்த
ஒரு செல்வம் நீதானே!
நீ தீண்டும் சுகமொன்று கிடைக்க
உன் உயிரில் நானும் கலந்தேனே!

எழுதியவர் : ராஜேஸ்குமார் (7-Apr-12, 7:07 pm)
சேர்த்தது : rajeshnannilam
பார்வை : 215

மேலே