என் வாழ்த்துக்கும் வலியுண்டு

என்ன செய்வது
அவளுக்கு எழுதிய
என் காதல் கடிதத்தின்
கடைசி வரிகளை வாழ்த்துக்களுடன்
முடித்துக்கொண்டேன்

அவளைப் பார்த்த என் கண்களுக்கு
யாரால் மருந்திட முடியும்
என் நெஞ்சமெல்லாம் ரணங்களாய்
வலிகளுடன் வாழ்த்துச் சொன்னேன்

கண்கள் தேடத்தான் செய்கிறது
கட்டுப்படுத்த முடியவில்லை
என் வலிகளை என்னால்தானே
விமர்சிக்க முடியும்

எழுதுகிறேன் எழுதுகிறேன்
பழைய எண்ணங்களையெல்லாம்
பல்லவியாக்கி எழுதுகிறேன்

இதை தோல்வி என்று சொல்லவா!
தொலைத்து விட்ட வாழ்க்கை என்று சொல்லவா!
எண்ண அலைகள் அவளை தேடுகின்றன
எண்ணிலா அலைகள் அவளை நாடுகின்றன

பாசத்தோடு பழகிய நாட்களை சொல்லவா!
அவளைக் காணாத நாட்களில்
பரிதவித்த என் கண்களைச் சொல்லவா!
முள்ளை பூ என்று நினைத்தேனோ!
என் நெஞ்சில் முட்களாய் குத்துகிறதே!

வலிகளுடன் வாழ்த்துச் சொன்னேன்
என் வாழ்த்துக்கும் வலியுண்டு
என்பதை புரிந்து கொள்வாளென்று!

எழுதியவர் : porchezhian (7-Apr-12, 7:10 pm)
பார்வை : 259

மேலே