இயற்கையின் இளைக்காரம்

மழையே
ஏழையின் வீட்டின் மீது மட்டும்
உனக்கு என்ன அப்படி இளைக்காரம் ,
கொட்டும் மழையில்
மண்ணோடு சேர்ந்தே
கரைந்துபோகிறது அவன் வீட்டு கூரையும் !

வீட்டுக்கு வெளியே
மழைக்காக குடைபிடித்தான்
நனைவதை தவிர்க்க ,
இங்கே இவன்
வீட்டுக்குள்ளும் குடை பிடிக்கிறான் !

மழை முடிந்து
வாரங்கள் ஆகியும்
அவன் வீட்டு அடுப்பில் மட்டும்
இன்னும் ஈரம் காயவில்லை !

ஆயிரம் சோதனைகள்
ஆறுதலுக்கு ஆளில்லை ,
இயற்கையின் கடிகாரம்
இவன் வீட்டு உள்ளே
நிழலாய் !

படையெடுக்கும் கார்மேகம்
பாரெங்கும் குளிராய்,
கூரைவீட்டு ஜீவன்களை ,
ஏனோ வாடி எடுக்கிறது
"பசித்தீ" !

எழுதியவர் : வினாய்கமுருகன் (7-Apr-12, 3:56 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 198

மேலே