காலமில்லை நண்பனே

காலமில்லை நண்பனே காலமில்லை

என்ன செய்ய வேண்டும் அதை செய்துமுடி

பலகாலம் போனது பின்னே

சிலகாலம் இருக்குது முன்னே

அதில் சரிவரச் செய்வோம் நற்செயலே

துணிவு துணை இருக்க தயக்கம் எதற்கு

இன்றே தொடகி நாளை முடித்து மறுநாள் வெல்வோம் மாற்றான் நெஞ்சில் குடிகொள்வோம்

அதற்கு யார் வருவர் என காத்திருக்க

நம் கையே போதும் நமை முன்னிறுத்த

அதை நம்பியே கால் வைப்போம் முன்னே

நிச்சயம் கைகொடுப்பான் இறைவன்

அவன் தானே நமக்கெல்லாம் தலைவன்.

எழுதியவர் : சௌந்தர்,,, (7-Apr-12, 1:07 pm)
சேர்த்தது : Sounder
பார்வை : 251

மேலே