பெண்மை

இடை மீதமர்ந்து ஒரு ராஜசவாரி - அம்மா

விரல் பிடித்து ஒரு நடை பழக்கம் - அக்கா

கன்னம் கிள்ளி கொஞ்சும் கிளி - தங்கை

மடி மீது தலை வைத்து
ஒரு கதை உறக்கம் - ஆச்சி

தோள் சாய்ந்தால் தோல்விகள் மறக்கும்- தோழி

கை கோர்த்து ஒரு கவிதை பயணம் - மனைவி

கன்ன திரையில்
விரல் தூரிகை தீட்டும் மழலை - மகள்

உயிராகவும் உடலாகவும் நமக்குள் கலந்திருக்கும் பெண்மையை போற்றுவோம்...........

எழுதியவர் : பாரதிசரண் (7-Apr-12, 12:31 pm)
Tanglish : penmai
பார்வை : 364

மேலே