பொம்மையோடு கற்ற பாடம்..
தினமும்
ஏதேதோ பேசுகிறாள்
என் மகள் பொம்மையோடு..
அவள் அயர்ந்த போது
என்ன பேசினாள்
என பொம்மையோடு வினவினேன்..
காட்டிகொடுக்கும் பழக்கம்
எங்கள் குலத்திற்கு இல்லை
என்பது போல் என்னிடம்
மௌனம் மட்டுமே காட்டியது..