முகநூல்...!!!!!!!!!!!

முன் பின் அறியாத நட்பு
முகம் கூட தெரியாத நட்பு
அதுவே முகநூலில் கிடைக்கின்ற நட்பு.

முகப்பில் இருக்கும் படத்தை வைத்தே
அவர் முகம் அறிய வேண்டும்.
பொய்யோ மெய்யோ நம்புகிறது மனம்.

இரவு வணக்கம் ஒரு பெண் சொல்வாள்.
அதை இருநூறு பேர் வழிமொழிவார்.

வெட்டி பேச்சில் வீணாகும் நேரம்
அதன் செல்ல பெயர் இங்கே சாட்டிங்.

ஆயிரத்தில் ஒருவர் மட்டும்
அர்த்தமுடன் உபயோகிப்பார்.
ஆதரிக்க ஆளின்றி அவை
அனாதையாய் நிற்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சிகளை
நல் வழியில் பயன் படுத்தல் வேண்டும்.
நல்ல செய்தி கண்ணில் பட்டால்
அதை ஆதரிக்க வேண்டும்.

எழுதியவர் : லலிதா.வி (9-Apr-12, 12:33 pm)
பார்வை : 642

மேலே