எனக்கே மகனாக பிறந்து விடு.

அம்மா இந்த வார்த்தைக்காக
பல நாள்கள் காத்து இருந்தேன்.

என்னையும் அம்மா என்று அழைக்க
என் மகன் பிறப்பான் என்று ஏக்கி தவிச்சேன்.

அந்த நாள் வந்தது
நானும் தாய்மை அடைந்தேன்.
என்னை அம்மா அழைக்க
என் மகன் வர போறான்
என்று ஆனந்த இன்பத்தில் மூழ்கினேன்.

ஒவ்வாரு நாளும் அவன் வளர்வது
பார்த்து சந்தோஷம் அடைந்தேன்.

பிறக்க போவது மகளா, மகனா என்று
பல முறை யோசித்து கொண்டு இருந்தேன்.

3 மாதங்கள் ஆனதும் தெரிய வந்தது
என் அழகிய குழந்தை பிறக்காது என்று.

நானும் சாகும் நிலை அடைந்தேன்
என்னை காப்பாற்றிய மருத்துவர்
என் குழந்தையே காப்பாற்ற முடிய வில்லை.

பிறகுதான்
நான் அறிந்தேன்
என் குழந்தை வளர்ந்தது
கருப்பையில் அல்ல, கருகுழாய்யில் என்று
என் குழந்தை வளர்ச்சி தாங்காமல்
குழாய் வெடித்ததால் நானும் இறக்கும் நிலை நேர்ந்தது.

இன்று
நான் பிழைத்தேன்
ஆனால்
என்னை அம்மா என்று அழைக்கும்
என் குழந்தை இல்லை.

அவன் இறந்து என்னை பிழைக்க வைத்தான்.
இன்று
அவன் இல்லாமல் அவன் நினைவில் அழுது கொண்டு இருக்கிறேன்.

என் கனவில் வந்து
அம்மா அம்மா என்று அழைக்கும்
என் மகன்.
நான்தான் உங்கள் மகன் வா அம்மா என்று
அழைக்கிறான்.

அவன் இழப்பை
என்னால் தாங்க முடிய வில்லை.

என் மகனே
மறுஜென்மம் எனக்கு கொடுத்தாய்
உனக்கு
மறுஜென்மம் உண்டு என்றால்
எனக்கே மகனாக பிறந்து விடு.
என்றும் உன் நினைவு என்னை விடு
அகலாது.
உன்னை நினைத்து கண்ணீர் வடிக்கும்
உன் அம்மாவிடம் விரைவில்
வந்து விடு.

மறுபடியும் நான் தாய்மை அடைந்தால்
நீயே என் மகனாக,மகளாக பிறக்க
தெய்வத்திடம் வேண்டுகிறேன்.

என் மகனே என்னிடம் வந்து விடு.
உன் அம்மா இங்கு இருக்கிறேன்
நீ எங்கு உள்ளாய்.

எழுதியவர் : g .m .kavitha (9-Apr-12, 11:18 am)
பார்வை : 421

மேலே