காதல்
என் இதயத்தை திருடியவளோ நீ,
தனிமை சிறையில் தண்டனை எனக்கா?
என்னை பார்த்தவளோ நீ,
பார்வை பறிபோனது எனக்கா?
என்னிடம் சிரித்தவளோ நீ,
அதிலே சிதறியது நானா?
உன் கன்ன குழியினிலே விழ வைத்தாய்,
உன் கூந்தல் வலையினிலே வலை விரித்தாய்,
அலைகிறனே நானும் உன்னை, அலைகழிக்கிறாய் நீயும் என்னை,
ஒற்றை தலைவலி போல, பாடாய் படுத்துகிறது இந்த ஒருதலை காதலும் என்னை...