தாய்மையின் வலி

நீ
இமயமாய்
உயர்ந்து
நின்றாய் !
மனதில்
கோபுர
கலசமாய்
விண்ணாய்
உயர்ந்தவன்
என நினைகையில் !
மடுவாய்
மண்ணோடு
மண்ணானாய்
சபையினர் முன்
என்
மகன்
இவன்
என
கூறாதே !
ஈன்றவளின்
கரு தெறிக்க
சொன்ன
நொடியில்!
உன்
வெற்றி பாதைக்கு
காரணம்
நீயே தான் என
நினைத்தாய் !
உன் தாயின்
ஒவ்வொரு
இதய துடிப்பில் தான்
என அறியாமல்
நீ வென்றாய்!
ஒரு
வார்த்தையில்
உன் தாயின்
இதய துடிப்பை
நிறுத்திவிட்டாய் !
இனி எங்கே
வெற்றி காண்பாய் !

எழுதியவர் : Devi (11-Apr-12, 11:13 am)
சேர்த்தது : Erodeiraivan
Tanglish : thaimayin vali
பார்வை : 230

மேலே