"ஆணியை புடுங்க வேண்டாம் "
சென்னை மயிலாப்பூரில் ஒரு வன்பொருள் கடைக்கு ஆணி வாங்க சென்றேன்
அங்கே முதாளிளியும் கடைக்கு வந்த வாடிக்கையாளரும் பேசிய பேச்சு அங்கே நடந்த நிகழ்வு ....
அப்போதுதான் தெரிந்தது நடிகர் ஐயா வடிவேல் சொன்ன அந்த டயலாக் புரிந்தது
"ஆணியை புடுங்க வேண்டாம் "
அந்த நிகழ்வு
முதலாளி :வாங்க சார் பார்த்து ரொம்ப நாளாச்சி வீடு எதுவும் கட்ட வில்லையா இஞ்சினியர் தொழில் எப்படி இருக்கு ?
வாடிக்கையாளர்(இஞ்சினியர் ) :இல்லை என் பையன் போன வாரம்தான் B .E ,பட்டம் வாங்கினான் அவனுக்கு ஒரு ஆபிஸ் ஓபன் பண்ணிகொடுத்தேன் இந்தாங்க அவன் விச்டிங் கார்டு .... சரி ஒங்க பையன் இருப்பானே எங்கே ?
முதலாளி :அவனுக்கு சென்னை கீழ் கட்டளையில் ஒரு ஷோ ரூம் ஓபன் பன்னி அங்கே அவன் இருக்கான் ..சரி லாஸ்ட்டா விஜயன் டாக்டருக்கு ஒரு பிளாட் கட்டி கொடுத்திங்களே அவரு எப்படி இருக்காரு
முதலாளி :அந்த பிளட்டுல அவர் இளைய மகனுக்கு ஒரு கிளினிக் வைத்துக்கொடுத்து அவர் சொந்த ஊருக்கு போய்விட்டார் .....
அப்போது ஒரு மீன்பாடி வண்டிக்காரர் குறுக்கிட்டு "இந்தாங்க ஓனர் டெலிவரி செய்துவிட்டேன் 100 ரூபாய் கம்மியாக கொடுத்தார் ..இந்தாங்க ஓனர் இவன்தான் என் மவன் இவனுக்கும் இனிமேல சவாரி கொடுங்க "என்று தனது மகனை அறிமுக செய்தான் அந்த வண்டியிழுக்கும் தொழிலாளி .........நான் வாங்கிய ஆணியை மடிச்சி கொடுத்த பேப்பரில் வீட்டில் வந்து பிரிக்கும்போது மிகப்பெரிய நடிகரின் xxx மகன் இந்த படத்தில் xxx அறிமுகமாகிறான் ..............................
அப்போதுதான் ஆணியை புடுங்க வேண்டாம் என்பதே தெரிந்தது...
இந்த நிலை மாறும்போதுதான் நிச்சியமாக
இந்தியா வல்லரசாக மாறும் அது வரை மாறாது என்பதுதான் உண்மை ....உண்மை ......உண்மை.......