கவிஞர்களே! வாருங்கள்!
தமிழ்-
ஒரு அழகிய பூஞ்சோலை
இதில் பூஞ்செடிகள்
பதித்தவர்கள் ஏராளம்
உயிரை உரமாக்கியவர்கள் ஏராளம்
உதிரத்தால் வளர்த்தவர்கள் ஏராளம்
கவிஞர்களே! வாருங்கள்!
உங்கள் வார்த்தைகளை
வள்ளுவர் போல் அளந்துபோடுங்கள்!
பாரதி போல் பார்துப்போடுங்கள்!
உங்கள் அகராதியில்
விரசமிருந்தால் விட்டுவிடுங்கள்
அகந்தையிருந்தால் அழித்துவிடுங்கள்
விவேகத்தை சேர்த்துகொள்ளுங்கள்
வதந்திகளை விலக்கிவிட்டு
போலிகளை தள்ளிவிட்டு
உண்மையை கவசமிடுங்கள்
முடிந்தால் களை எடுங்கள்
நீங்களே களையாகாதீர்கள்!
எழுத்தால் எச்சமிடாதீர்கள்
கவிஞர்களே! வாருங்கள்!
(எழுத்து தள நண்பர்களே!
இதுவரை நான் எழுதியவைகளில்
அழுக்குகளை அழித்துவிடுங்கள்.
“என் எழுத்தால் இனியொரு கேடு செய்யேன்”
என்று என் மனதில் உறுதிகொண்டேன்.)