நானும் நானும்
நான் சொல்வதை
அவன் கேட்டால்
அவன் சொல்வதை
நான் கேட்டால்
நாங்கள் நல்ல நண்பர்கள்
சில நேரங்களில்........
அவன் சொல்வதை
நான் கேட்பதில்லை
நான் சொல்வதை
அவன் கேட்பதில்லை
நாங்கள் மோசமான எதிரிகள்
எங்களுக்குள் நடக்கும்
மகாயுத்தம்
பெரும் அவஸ்த்தை
யார் உபதேசிப்பார் கீதை?

