இதுதான் விதி என்பதா?

பசியோடு
தவளை
எதிரிலிருந்த
பூச்சியை
பார்த்துக்கொண்டிருந்தது.....

பயத்தோடு
பூச்சியும்
எதிரிலிருந்த
தவளையை
பார்த்துக்கொண்டிருந்தது.....

எல்லாம் சில வினாடிகளே

இப்போது

பயத்தோடு
தவளை
எதிரிலிருந்த
பூச்சியை
பார்த்துக்கொண்டிருந்தது.....

பாம்பின் வாயிலிருந்து.

இதுதான் விதி என்பதா?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (25-Apr-12, 11:20 am)
பார்வை : 419

மேலே