என் ஜன்னலுக்கு வெளியே........,
பனித்துளி
அதிகாலையில்
... அவரை இலைகளின்
கைரகையில் இருந்து விடுபட்டு
கொடிகளின் வழியே
கணுகளின் மேடு பள்ளங்களில் பயணித்து
மண்ணில் மழையாய் மாறி வெப்பதினை அணைக்க....,
அணைத்த வெப்பதிலிறுத்து
வெளிப்பட்ட புகையாய் கிளம்பிய -மண்வாசனை
என் நாசியுனுள் நுழைந்து
தும்மல் வந்து தூக்கம் கலைக்க......,
முன்று மணிக்கு
அழைப்போசையை பதிவு செய்திருந்த
அலைபேசியை பார்த்த போது
மணித்துளிகள் 2 .50...
தீடிரென...,
என்
மனதுக்குள் ஒரு மின்னல் தோன்றி மறைய.....,
அது
மூளையின் மேடு பள்ளங்களை கடந்தபோது-கிளறிய
சிந்தனைகளை எண்ணங்கலாய் கண்கள்காட்ட...,
உதடுகள் அசையாமல்
மவுனமாய் படித்தது
என் காதுகளுக்கு மட்டும் கேட்டது....,
கரிச்சான் குருவி காலை 3 மணிக்கு கத்துமாம்
செம்போத்து பறவை 3 .30 மணிக்கும்
குயில் 4 மணிக்கும் சேவல் 4 . 30 மணிக்கும்
காகம் 5 மணிக்கும் ,மீன் கொத்தி பறவை 6 மணிக்கும் கத்துமாம்
இது தமிழர்களின் நாட்டுபுற பாடல்களில் இடம் பெற்ற வரிகள் ....,
இது உண்மையா ? என்று பரிசோதிக்க
என் ஜன்னலுக்கு வெளியே பார்த்து கொண்டிருதேன்......
மணி 6 ஆனது......
என் முடிவுகளை அறிவிக்கும் நேரம் இது....
பறவைகளை காணவில்...., என்று அறிவிக்கும் போது
குயில் ஒன்று
சிறகை விரித்து வந்தது....,
அது சோம்பலை முறித்து கூவியபோது
மணித்துளிகள் 6 . 20 .....,
அதனை
தொடர்ந்து வந்த காகம் கரையும் போது
மணித்துளிகள் 6 . 30 ...,
கடைசியாக வந்தசேவல்
இறக்கைகளை முறித்தபடி உடலை சிலர்திவிட்டு......,
கூவும்
என்று எதிர்பார்த்த போது - மீண்டும்
கூடைக்குள் புகுந்துகொண்டது
கூவ மறந்த சேவல் ....,
இந்த உலகில் மனிதர்கள் மட்டுமல்ல
பறவைகளும் மாற்றிகொண்டன
மரபுகளை......,