!!! யாரோ நீ... !!!
என் இரவையும் பகலையும்
நிறம் மாற்றி
என்னுள் உன்னை கருவாக்கி
உயிரின் நரம்பினை நாணேற்றி
காதல் கணைகள் தொடுத்தவளே...
என்னவளா நீ...?
இல்லை இல்லை யாரோ நீ...
உச்சத்தின் உர்ச்சவ உச்சியிலே
ஒருநொடி பிரிவை தந்தவளே
ஒருநொடி பிரிவை தாங்காமல்
ஒருஜென்ம சோகம் தழுவியதே...
என்னவளா நீ...?
இல்லை இல்லை யாரோ நீ...
உயிரின் மூச்சை உயிராக்கி
உணர்வின் வலியை உணர்வாக்கி
இம்சைகள் யாவும் இனிதாக்கி
கண்களில் பிம்பம் ஆனவளே...
என்னவளா நீ...?
இல்லை இல்லை யாரோ நீ...
அலைபோல் நினைவாய்
தினம் வந்து
சிலைபோல் நெஞ்சில்
குடி கொண்டு
என்னுள் நங்கூரம் ஆனவளே...
என்னவளா நீ...?
இல்லை இல்லை யாரோ நீ...
இளமையை பிடித்து சிறையிட்டு
இதயத்தின் நடுவில் துளையிட்டு
விழிகளை வீசி எனையுடைத்து
எட்டி நிற்கும் ஏந்திழையே...
என்னவளா நீ...?
இல்லை இல்லை யாரோ நீ...
எரிக்கும் சூரியன் எனையெரித்து
தங்கமாக்கிய தாமரையே
தங்கம் தகரம் ஆனதடி
தனிமை என்னை கொல்லுதடி
என்னவளா நீ...?
இல்லை இல்லை யாரோ நீ...
பார்வையை மட்டும் பரிசாக்கி
வார்த்தையை மட்டும் வாழ்த்தாக்கி
பிரிவை மட்டும் துணையாக்கி
அன்பை விதைத்து போனவளே...
என்னவளா நீ...?
இல்லை இல்லை யாரோ நீ...!!!