அணில் திருடிய வடை..

பாட்டி சுட்ட வடை - அதை
காக்கை திருடிய கதை
நரியின் தந்திரம் கண்டு
ஏமாந்த கதையும் உண்டு .

அணில் கவர்ந்த வடை - அதை
கண்டதும் மனதில் சிறு வதை
வாடிக்கையாய் வேடிக்கை பார்பவர்க்கு
புரிந்திடுமோ அணிலின் நிலை .

பழமும் விதையும் உண்ணும் - அதுவோ
பலகாரம் உண்பது வேடிக்கை தானெனினும்
பதுங்கிவாழ மரங்களில்லா ஊரில்
பழங்கள் கிடைப்பது சாத்தியமா ?

உனக்கென ஒரு வீடமைக்க -மனிதா
பறவை விலங்கினத்தின்
பலகூட்டை சிதைத்தாய்
பட்ச்சிகளும் உயிரென மறந்து...

எவ்வுயிர்க்கும் பொதுவாம் இவ்வுலகு - அது
மாந்தர்க்கு மட்டுமென ஆனதுவே இன்று .
நாளைக்கு நமக்கெந்த நிலையென மறந்து
சோலைக்கு உலையூட்டும் மானிடப் பதர்கள்........

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (4-May-12, 11:38 am)
பார்வை : 393

மேலே