வாழ்க்கை - ITS UR CHOICE

ஒரு தத்துவ பேராசிரியர் தன் வகுப்பறையில் முன் மேசையில் சில பொருட்களை வைத்து நின்றார். வகுப்பு தொடங்கிய போது, அவர் ஒரு மிக பெரிய மற்றும் காலியான அகன்ற
வாய்க்கொண்ட கண்ணாடி ஜாடியில் கற்களை நிரப்ப தொடங்கினார். கண்ணாடி குடுவை முழுவதும் கற்களை நிரப்பினர். இப்போது கண்ணாடி குடுவை நிரம்பிவிட்டதா என்று மாணவர்களை பார்த்துக்கேட்டார்? அதற்கு மாணவர்கள் ஆமாம் என்று பதில் அளித்தனர்.

பின்னர் ஒரு பெட்டியில்லிருந்து கூலாங்கற்கள் சிலவற்றை எடுத்து நிரப்பினார். ஜாடியை சிறிது குலுக்கியதும் திறந்த வெளி பகுதிகளில் கூலாங்கற்கள் கற்களோடு நிரப்பிக்கொண்டன. மறுபடியும் மாணவர்களிடம் கண்ணாடி குடுவை நிரம்பிவிட்டதா என்று கேட்டார்? அதற்கு மாணவர்கள் மீண்டும் ஆமாம் என்று பதில் கூறினர்.

பேராசிரியர் மீண்டும் ஒரு பையில் இருந்து மணலை ஜாடியில் ஊற்றினார். மணல் ஜாடி முழுவதும் நிரப்பிக்கொண்டது. மீண்டும் மாணவர்களிடம் கண்ணாடி குடுவை நிரம்பிவிட்டதா என்று கேட்டார்? அதற்கு ஆமாம் என்று மாணவர்கள் ஒருமித்து பதிலளித்தனர்.

பேராசிரியர் மாணவர்களை பார்த்து " இந்த ஜாடி உங்கள் வாழ்கையை போன்றது" என்றார்.
இதில் நிரம்பிய கற்கள் உங்களின் வாழ்க்கையில் முக்கியமானவைகள் - அது உங்கள் குடும்பம், உங்கள் ஆரோக்கியம், உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் உறவினர்கள் என பல அடிப்படைகளை குறிக்கிறது. இவைகள் உங்கள் வாழ்க்கையை முழுமையடைய செய்கிறது.

உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் வாகனங்கள் போன்றவைகள் கூலாங்கற்கள் போன்றவை. இவைகள் அனைத்தும் இரண்டாம் பட்சம் உங்கள் வாழ்க்கையை சொகுசாக மாற்றக்கூடியவை. இவைகள் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. மணல் மற்ற எல்லாவற்றையும் குறிக்கிறது.

நீங்கள் முதலில் மணலை ஜாடியில் நிரப்பினால் கற்களையோ கூலாங்கற்களையோ உங்களால் நிரப்பி இருக்கமுடியாது. அது போன்றது தான் உங்கள் வாழ்கையும். நீங்கள் சிறிய விஷயங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்தால், உங்களின் குடும்பம்,குழந்தைகளில் அதிக கவனம் செலுத்த முடியாது.

குடும்பத்திற்கு அதிக நேரத்தையும் முக்கியத்தையும் கொடுங்கள். உங்களின் குழந்தையுடன் விளையாடுங்கள், உங்கள் குடும்பத்துடன் வெளியே செல்லுங்கள். உங்கள் பெற்றோர்களுடன் நேரம் செலவிடுங்கள். உங்கள் துணையுடன் காதலை பரிமாறுங்கள். இன்றைய யுகத்தில் நாம் சின்ன சின்ன விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி நம் குடும்பத்துடன் நேரம் கழிக்க முடியமால் தவிக்கிறோம்.


உங்களின் மகிழ்ச்சி சின்ன சின்ன விஷயங்களில் இல்லை.. உங்கள் வாழ்க்கை ஜாடியில் முதலில் கற்களை நிரப்புங்கள் மற்றவைகள் அனைத்தும் அடுத்தபடியே.. நீங்களே இப்பொழுது முடிவு செய்யுங்கள் உங்களுக்கு எது வேண்டும் என்று?

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (6-May-12, 9:03 pm)
பார்வை : 2072

மேலே