வழக்கு : 18 / 9

என் ஏழை சமுதாயத்தை ஏமாற்றி வரும் ஏகாதிபத்திய சட்டத்தை எதிர்த்து திரு பாலாஜி சக்திவேல் அவர்கள் தொடர்ந்த வழக்கு : 18 / 9. வறுமையில் கிடப்போருக்கெல்லாம் வக்கீல் போல வாதாடிய இருக்கிறார். சீரழியும் இந்த சமுகத்தின் மீது கொண்ட கோபத்தை சத்தமில்லாமல் வெளிபடுத்தி இருக்கிறார் வெடித்திருக்கிறார். இது நாம் பார்க்க வேண்டிய படமல்ல, படிக்க வேண்டிய பாடம். என்னை பொறுத்த வரை இது திரைப்படம் அல்ல எல்லோர் மனதிலும் திணிக்கபட வேண்டிய விழிப்புணர்வு போராட்டம்.
இப்பட குழுவிற்கு வாழ்த்து சொல்லி முடக்கி விடுவதில் எனக்கு விருப்பமில்லை. சாவல் விடுகிறேன் உங்கள் அடுத்த சவுக்கடி என் சமுதாயத்தின் முதுகை இன்னும் அதிகம் பிளக்குமா? ஓங்கி அறையும் உங்கள் கைகளின் அடுத்த அடி இன்னும் இன்னும் அதிக அதிர்வலையை என்னுள் ஏற்படுத்துமா?

---தமிழ்தாசன்---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (7-May-12, 5:10 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 335

மேலே