பரத நாட்டியம் ! கவிஞர் இரா .இரவி

பரத நாட்டியம் ! கவிஞர் இரா .இரவி

தோகை உண்டு
பெண் மயிலுக்கு
பரத நாட்டியம் !

பேசும் விழிகள்
சைகை மொழிகள்
பரத நாட்டியம் !

வேற்று மொழியை விட
தமிழ் மொழி இனிமை
பரத நாட்டியம் !

கண்டு ரசித்தால்
கவலைகள் போகும்
பரத நாட்டியம் !


வரிகளுக்கு ஏற்றப்படி
வஞ்சியின் நளினம்
பரத நாட்டியம் !

கைகளும் பேசும்
கால்களும் பேசும்
பரத நாட்டியம் !

குத்துப் பாட்டும் உண்டு
குறத்தி நடனம்
பரத நாட்டியம் !

ராகத்தை ரசிக்கலாம்
சோகத்தை மறக்கலாம்
பரத நாட்டியம் !

புத்துணர்வுப் பெறலாம்
புதுமைகள் காணலாம்
பரத நாட்டியம் !

எழுதியவர் : இரா .இரவி (8-May-12, 10:03 am)
பார்வை : 4083

மேலே