அப்பா

நடை பயிலும் நேரம்
இன்னொரு காலாய்...

விளையாடும் நேரம்
எனக்குகந்த நட்பாய்...

துயில் கொண்ட நேரம்
தூங்காத விளக்காய்...

இருந்துவிட்டார்
நிழல் போல
என்னருகில்
எந்நொடியும் ...

இப்பொழுது
நான் வணங்கும்
தெய்வமென
மாறிவிட்டார்..

சுமந்தெடுத்த
தாய் பத்து
ஈடாக்க இயலாத
அன்பெல்லாம் என்னதனாய்
ஆக்கிவிட்ட என் மனிதர்..

துன்பத்தின் போது
துவளாத வாழ்வை
தான் வாழ்ந்து உணர்த்திய
உயர்வான
முதல் குரு..

இருப்பை நீ
உணர்த்துகிறாய்
என் வெற்றி எல்லாம்
உன் அருளாய்..

முப்பொழுதும்
நினைக்கவில்லை...
காரணம்
உன்னை நான்
மறக்கவில்லை...

என் மகனாய்
நீ வந்து
பிறந்தாலும்
பிறப்பெடுப்பாய்..
இன்னும் ஏழு
சென்மத்தில்
உன் மகனாக
வரம் கொடுப்பாய்..

காயம் துறந்து
காற்றில் கலந்தாலும்
என் உயிரில் இன்றும்
உறைந்திருக்கும்
இன்னொரு உயிர்...

அப்பா ..

என்றும்
உன் நினைவால்..

எழுதியவர் : கலாப்ரியன் (9-May-12, 7:25 am)
Tanglish : appa
பார்வை : 373

மேலே