ஜன்னல் சிறையாகும் முன்னர்...
மனசின் இடம் தெரியாத
திசையிலிருந்து-
பற்கள் நீள சிரிக்கிறது இருள்...
பகலிலும்.
கிணற்றுக்கு வெளியே தவ்வும்
தவளைகளின் சப்தமும்...
உறுமலாகிறது....
என் செவிப்பறைக்கு வெளியே.
வருடும் காற்று....
தீப்பந்தமாகிவிட...
அதில் மிதந்து செல்கிறது....
தொலையும் இளமையின் முனகல்.
யாரோ ஒருவனுக்காகக்
காத்திருக்கும் நான்..
எனது ஜன்னல் சிறையாகும் முன்
எரித்துவிட வேண்டும்
நான் பிறந்த நக்ஷத்திரத்தை....
வேறு யாரும்
பிறப்பதற்கியலாதபடி.

