தெருவோடு வந்தவன் அவளின் கருவோடு போகிறான்

கம்பனை ,
கருவிலே கண்டுவிட்டு
அவரிடம், கவிதை
கற்றுக்கொண்டவரா,
இந்த இலக்கியதேவன்!
அழுக்குச்சட்டையை
போட்டுக்கொண்டு
அலையும்,
கவிதைப்பித்தனோ நான்!
என்வீட்டுக்குடிசையில்
இருக்கும் வீர ஓட்டைகள்,என்கிழிந்த
சட்டையைப்பார்த்து,
வீரம் நெய்தசட்டைதான்
புறமுதுகு காட்டுவது
ஏன்என்று,எனக்கு,
கவிதைகள் கற்றுகொடுக்கிறது!
சீக்குபிடித்த
கோழிகுஞ்சு இன்று,
சாகும் தருவாயில் துடிக்கிறது!இன்னும்
சில நொடிகளில்
அதன் ஆத்மா,
உடலின் ஆதிக்கத்தை
முடித்துவிட்டு,
உறைவிடம் சேரப்போகிறது!
அழைப்புவிடுத்தும்
ஆட்கள் யாரும்
வரவில்லை!
இறுதி மரியாதைக்கு
இழுத்துக்கொண்டு
போக எனக்கு
மனமில்லை!
தூக்கி கொண்டுபோகவும்
யாரும் வரவில்லை
அப்போது
என், குடிசைவீட்டைச்சுற்றி
குள்ளநரிகள்
குழிபோட்டுக்கொண்டு
இருந்தது,அந்த
குள்ளநரிகளை
கூட்டிவந்து அதன்உதவியொடு
அந்த கோழிக்குஞ்சை
குழியில் புதைத்தேன்!
தெருவில் ஒருசடலம்
தெரிந்து கிடநதாலும்
தெரியாமல் ஓடும்
கூட்டம்இது! என்று
குள்ளநரிகளும்
குமுறியதை பார்த்தேன்!
என் வீட்டு வாசலில்
நடந்த இந்நிகழ்வு,
நேற்று ஒரு மருத்துமனையின் வாசலில்......
மனிதனா இவன்
என்று சொல்லும்
அளவுக்கு ஒருஅனாதைசடலம்.
பிணத்துறவிபோல்
பணத்தைத்தேடி
வந்தவனா இவன்!
குடித்துவிட்டு
குடிபோதையில்
குடியைக்கெடுத்தவனா,
இவன்!
பணமில்லாமல்
பிணம்போல் படுத்து
உறங்கும் பாவியா இவன்!
அடப்பாவி!
எரிப்பதற்குகூட ஆளில்லாத தேசத்தில்
வந்து,ஆவியாய்
போனாயே!
வானத்தைப்பார்த்து உன் விழிவீணை,
விரைத்துக்கொண்டு
இருக்கிறதே!
ஒரு வேளை இவன்
இலட்சிய மிருகமா!
இருக்காது.
உயிர் இருக்கிறதோ,
ஆம் அய்யோ,
உயிருடன் தான்
இவ்வளவு நேரமாய்
துடித்திரிக்கிறான்!
இதோ!இதோ!
அவசர எண்.108
ஹலோ!ஹலோ!
சார்,
இங்க ஒரு ஆள்
உயிருக்கு துடிக்கிறாரு
என்ன,, என்ன,,
எந்த எடமுனு கேக்குறிங்களா! இதோ
ஒரு நிமிசம் இருங்க
(ஒரு நண்பரிடம்)
அண்ணே அண்ணே
இது என்ன ஏரியாணே
அண்ணே இவருக்கு உயிர்
இருக்குதுணே
அட போப்பா நீ வேர
போன வாரந்தான்
ஒரு பொணத்த
எடுத்துட்டு
போனாங்க இப்ப இது வேறயா.
தம்பி
ஓ வேளெ என்னவோ அத மட்டும் பாரு சரியா
ஏங்க, ஒங்க கால்'ல விழுகுறங்க.
இது என்ன அட்ரஸ்'னு
மட்டும் சொல்லிருங்க
ஏம்ப்பா,நா
மாட்டிக்கிட்டா நீயா
வந்து காப்பாத்துவ!
சாமி ஆள விடுப்பா!
நான் முகவரி கேட்டு
முடிப்பதற்க்குள்,
அவன் முதல்வரியை
முடித்துவிட்டு
போய்விட்டான்!
தேசம் எப்போது
தீயில் எரியும்?
அப்போதுதான்
சுயவுடமை முறியும்!
சுதந்திரத்தில்
செத்திருந்தால்
தியாகச்சடலம்
ஆகியிருப்பான்!
சுதந்திரப்போராட்டவீரர்
எனும் சரித்திரம்
பெற்றிருப்பான்!
எவனோ ஒருவன்
செத்தான் என்று,
எவனோ ஒருவன்
சொல்லிவிட்டு போகிறான்!
அது அவமானம்,
என்பதை, உன்ஆன்மா
நிச்சயம் உணரந்திருக்கும்!
அய்யோ அங்கு,
உன் கருவைத்தாங்கும்
கர்ப்பிணி,
வளைகாப்புக்கு
காத்திருப்பாள்!அதற்கு
பூவும்,பொட்டும்
புதுசேலையும்,
வளையலும்,நீ
வாங்கிவருவாய் என
நினைத்திருப்பாள்!
வளைகாப்புக்கு
அப்பாவையும்
அம்மாவையும்
சொந்தகாரர்களிடம்
போய்ச்சொல்லுமாறு
சொல்லி அனுப்பியிருப்பாள்!
மாலைகள் கட்டச்சொல்லி
பூக்காரரிடம்
முன் பணம்
கொடுத்திருப்பாள்!
உன் பெண்பிள்ளை
"அப்பா எங்கம்மா"என்று
கேட்டிருப்பாள்!
அதற்கு அவள்,உனக்கு விளையாட்டு
பொம்மை வாங்க
போயிருக்கிறார் என்று
விளையாட்டாய்
சொல்லியிருப்பாள்!
கொட்டகைகாரனோ
கொட்டகைபோட
மட்டைகளை
இறக்கி
கொண்டிருப்பான்!
உன் தாய்மாமனோ,
விசேசவீடென்று
முதல்நாளே வந்து
"மாப்ள எங்கத்தா"என்று
உன் மனைவியிடம்
கேட்டிருப்பார்!
சொத்தை
பிரித்துக்கேட்ட
உன்தம்பியோ,
வீட்டின் பத்திரத்தை,
பரிசோதனை செய்து
கொண்டிருப்பார்!
இங்கு உன்பிரேதம்
பரிசோதிக்கப்பட்டு
கொண்டிருக்கிறதே!
அய்யோ!அய்யோ!
இந்த பிரேதசெய்தி தெரிந்தால்
அங்கு என்ன ஆகுமோ!
தெரியும்போது
உன்னுடன் சேர்ந்து
அவளும் உடன்கட்டை
ஏரிடுவாளோ!
கற்பத்தை பிடித்து கசக்கி,
அப்பொழுதே
மாய்வாளோ!
உன் பிரேதத்தில்
விழுந்து, அப்பொழுதே
பிரேதமாவாளோ!
எல்லோரும்
அழுவார்கள்,உன்
தம்பிகாரன்மட்டும்
வஞ்சகமாய்
அழுவானோ!
முதலையின்
முட்டைக்குள்
கண்ணீர் வடிப்பானோ!
கருவோடு வந்து
தெருவோடு போவது
என்பது
தெரியும்!ஆனால்
தெருவோடு வந்து
அவளின் கருவோடு
போவது இப்போதுதான்
தெரியும்!
எதற்குதான் அவன்
தெருவுக்கு வந்தானோ! இன்னும் எனக்கு
தெரியவில்லை!
தெருச்சடலம்தான்
தேசத்தின் படலமோ!
அதை நினைததால்
என்உடலும்தான்
சடலமோ!!!....