நிழல்...வெறும் நிழலாயிருப்பதில்லை.

என்னை எப்போதும் ...
உள்ளது உள்ளபடி
காட்டுவதில்லை
எனது நிழல்.

எப்போதும் எனக்கு வேறாய்..
என்னை சீண்டியபடி.

எனது வருத்தங்களை...
சந்தோஷங்களை...
எனது உணர்வுகளை...
எப்போதும் சொன்னதில்லை.

நிஜமில்லை....
என ஒதுங்கியே இருக்கிறேன்.

என்றாலும் ....
அச்சுறுத்திவிடுகிறது யாரையாவது..

என்னிடமிருந்து....
தனித்துத் தெரியும் கணங்களில்.

எழுதியவர் : rameshalam (17-May-12, 11:55 am)
சேர்த்தது : rameshalam
பார்வை : 148

மேலே