இதய உறவுகள் இணைந்தபோது (லலிதா விஜய்குமார்)

சுற்றாமல் இருந்த என் வீட்டு
சுவர் கடிகாரம் போல தான்
எவ்வித அசைவுமின்றி கிடந்தேன்
உன்னை பிரிந்திருந்த நாட்களில்.

சேர்ந்து விடுவோம் என்று நினைக்கும்
போதெல்லாம் கத்திய கௌளி கூட
சோர்ந்துவிட்டது.

ஆம்!
உன் நினைவுகள் தான்
என் சுவாசம் ஆயிற்றே
பாவம் கௌளி அதனால் எப்படி
இடைவிடாமல் கத்த முடியும்.

உன்னை பிரிந்த நாட்களில்
தான் என்னை அறிந்து கொண்டேன்.
என்னை எனக்கே அறிமுகம் செய்து
வைத்தாய் நீ. இந்த பிரிவின் அர்த்தம்
புரிந்துக் கொண்டேன்.

நீ அடைத்து விட்டு சென்ற என்
இதயக் கதவை யாரோ தட்டும்
சத்தம் கேட்டது.

நீயாக இருக்க வேண்டும்
என்று நெஞ்சுக்குள் நூறு தெய்வத்தை
வேண்டிக்கொண்டு திறக்க முயன்று
தோற்று போனேன்.

ஆம்! இன்னொரு உறவுக்கு உள்ளே
அனுமதி இல்லை.
உன்னை தவிர ஒருவருக்கும்
அது சொந்தமில்லை.

நம் நேசத்தை நெஞ்சத்தில் கொண்டு
உன் பாசத்தை தைரியமாக்கி,
என் இதய கதவை திறந்தேன்.
அத்தனை திசையிலும் நீ.

என் கவலைகள் அனைத்தும்
களிப்பாக மாறிவிட்டது.
என் சுவர் கடிகாரம் இப்போது
உலகத்தை சுற்றி வர துடிக்கிறது.
இயங்க மறுத்த என் இதயம்
இப்போது இருமடங்கு துடிக்கிறது.

காத்திருந்த இதயம்.
வலிகளை சுமந்த இதயம்.
சட்டென்று விழித்துக் கொண்டது.
கதவுகளை அடைத்து சாவியை தூக்கி
எரிந்தது வெளியே.

இனி ஒரு போதும் இந்த
நேசவலையில் இருந்து நம்மால்
வெளியேற முடியாது.

எழுதியவர் : லலிதா.வி (17-May-12, 12:51 pm)
பார்வை : 505

மேலே