தோழன் மட்டும் வேண்டுமே

சுய சிந்தனைகளைக் குறை கூறி ஏற்க மறுத்த,என் சமூகம்

ஒண்ணுமின்றி உணவுண்டச் சொன்ன,என் உறவுகள்

பாதுகாப்பதாய் நினைத்துக் கொண்டு இருட்டு அறையில் பூட்டி வைத்த, என் பெற்றோர்

எல்லாமின்றி ஏதுமில்லை என்று சொன்ன,என் கணவன்

அன்பெனும் அழகியத் தொல்லையில்,என் குழந்தைகள்

முதிர்ச்சியானத் தோற்றத்தில்,என் நிலை

ஒரு செல் உயிரிகளுக்கு மட்டும் உணவாகிய என் உடல்...

எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி அனைத்திலும் பங்கு கொண்ட என் தோழர்கள்...

இனி,ஒரு ஜென்மமெனின் எவ்வித உறவுமின்றித் தோழன் ஒருவன் வேண்டுமே..

எழுதியவர் : Dhanu (31-May-12, 11:02 pm)
பார்வை : 739

மேலே