பொன்னானது வாழ்க்கை
விதையைப் பயிரிட்டு
வளம் கொழிக்க
மண்தானே-பொன்
மனிதன் மனதில் பயிரிட்டு
விதையிட்டு வளம்
கொழிக்க அவன் கண் தானே -பொன்
கற்களை உளியிட்டு
செதுக்கிட்டு உருவம்
வெளிப்பட அவன்
திறமைதானே -பொன்
நிலத்தை உழுதிட்டு
பயிரிட்டு உரமிட்டு
நெல்மணி வெளிவர அவன்
உழைப்புதானே -பொன்
வானமும் கடலும்
உன் வசமாக அவன்
கனவு தானே -பொன்
இறந்தது இறந்தகாலம்
நிகழ்ந்து தெரிந்தது
எதிர்காலம் அவன்
விழிக்காலம் -பொன்
எல்லாமும் பொன்தானே நம்
வாழ்க்கையில் !

