நிம்மதியான தூக்கம்

காலையில் எழுந்ததும்
சங்கொலி கேட்டேன்
தொழிற்சாலை ஐ லிருந்து...!

மதிய வேளையில்
ரயில் வண்டியின்
ஒலியைக் கேட்டேன்
தண்டவாளத்தில்
போய்க் கொண்டிருக்கும் போது...!

மாலையில் நான் ஒரு
இனிமையான ஓசை கேட்டேன்..
பறவைகளின் கீதங்களை
தன கூட்டில் அடையும் போது....!

இரவில் நான்..
இவற்றையெல்லாம்
நினைத்து,எண்ணி
ரசித்து உறங்கிப்
போகின்றேன்
நிம்மதியான தூக்கத்தில் ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 10:24 am)
பார்வை : 443

மேலே