தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்:
கட்டுரை என்ற தலைப்பில்
உங்கள் ஹிஷாலீ
மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் கண் முன்
தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்:
மற்றப்பூகள்: தாமரையை பார்த்து நீ எங்களை விடப் பெரியவளோ?
தாமரை : இல்லையே நாம் அனைவரும் ஒன்று தான் சகோதரியே
பூக்களில் பெரியவள் சிறியவள் என்று பாகுபாடில்லையே
மற்றப்பூகள் :அப்படி என்றால் உன்னை மட்டு ஏன் பெண்கள் தலையில் சூடுவதில்லை?
தாமரை: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சகோதிரிகளே நான் இறைவனுக்காக படைக்கப் பட்டவள் இல்லை பெண்மையின் கற்பை புனிதப் படுத்தும் உவமைக்காக படைக்கப்பட்டவள்
மற்றப்பூகள்:புரியவில்லையே ....?
தாமரை: நீங்கள் அழகு பெண்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை தலையில் பூ சூட்டி மகிழும் மென்மை மனம் கொடவர்கள் மேலும் பூஜைக்கும் உங்களை உபயோகிக்கிறார்கள் அதற்கு மேலும் இறந்தபோதும் இன்னும் இறக்காமல் வாழும் பெண் மக்களுக்கு நீங்கள் தியாக உள்ளத்துடன் உதவி புரிகிறேர்கள்,
எல்லா மங்கள காரியங்களுக்கும் உங்களுக்கே முதல் உரிமை கொடுகிறார்கள்
அப்படி பாட்ட தியாகம் உள்ளம் கொண்ட உங்களை கண்டு மற்றவர்கள் ஜாதி மதம் இனம் மொழி என வேறுபாடு அறியாமல் யாவரும் ஒன்றே என உணரவேண்டும்
மேலும் இந்த உலகில் மனித உயிர்கள் உங்களை போல் உதிரும் நிலையை கொண்டது .அவரவர் விதி அவரவருக்கே தெரியாது என்பதை புரியும் வகையில் உங்களை கடவுள் படைத்துள்ளார் இதை யாவரும் அறிந்து உணர்வதற்காகவே நீங்கள் காலையில் பூத்து மாலையில் மறைகிறேர்கள்.
நானோ காதல் மோகத்தில் சில பெண்களின் தவறுகளை உணர்த்தவே நான் கடவுளின் திருவடியில் பூஜிக்கிறேன் அதாவது பெண்மையின் கற்பு தன் கணவனின் ஒருவனுக்கே உரியது என்பதை மனதில் நிறுத்தி பெண்கள் தாமைரைபோல் தன் கற்பை காத்து கடவுளாகிய கணவனுக்கே சொந்தமாக்கி வாழவேண்டும்
எப்படி நான் கதிரவனின் காதலில் விரிந்தாலும் கை தொடா வாசத்தில் இறைவனின் திருவடியை அடைந்து என் பெண்மையை காத்து கடவுளுக்கு விருந்தாகிறேன் இதனால் தான் என்னை தேசிய மலராக பெயர் சூட்டி நம் இந்தியப் பெருமையை நிலை நாட்டும் வகையிலும் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை பேணி காக்கும் அருவுரைகளை எடுத்துரைக்கவும் மண்ணில் நான் தாமரையாக பிறப்பெடுத்தேன்
தெய்வ மலர்
தேசிய மலர்
தாமரை
என்ற பேருக்கினங்க வாழ்கிறேன் போதுமா ...
மற்றப்பூகள்:ம்ம்ம் இப்போது புரிந்தது நீ கூறுவதும் முற்றிலும் உண்மையே இந்த உண்மையே எங்களுக்கு உணர்த்த காரணமான தமிழ் தோட்டத்திற்கும் மேலும் என்னை போல் உன் பெருமையை அறியாத பெண்களுக்கும் உன் உரையாடல் ஒரு பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி விடை பெறுகிறேம் நன்றி வணக்கம்.
என் காதல் பள்ளி கொண்டது
இறைவன் சன்னதியில்
தாமரை பூக்கள்