மறுப்பேதும் உண்டா ?
சொல்........ அம்புகளாய் ...
கவி வில்லில் இருந்து பாய வேண்டும் ...!
சொல்...... சித்திரமாய் ...
சிந்தனை சிற்பத்தில் வார்க்க வேண்டும் ..!
வார்த்தைகளை ..சுவாசித்தால் ..
அது கவிதை ...!
வார்த்தைகளை வாசித்தால் ...
அது செய்தி ..!
நீங்கள் ..சுவாசிக்கிறீர்களா ? வாசிக்கிறீர்களா ..?
முள்ளொன்று தைப்பதற்கும் ....
முள் குத்தியதர்க்கும் ...
அர்த்தம் ஒன்றுதான் ...ஆனால்
வார்த்தை வசீகரம் எதில்...?
கவிதைக்கு அழகு ...வார்த்தை வசீகரம்தான் ..
எதார்த்தையும் ..கற்பனை கலந்து ..
சற்றே மிகைப்படுத்தினால்தான் ..கவிதை ..!
புருவத்திற்க்கு மை தீட்டுவது போல ...
வார்த்தைக்கும் வசீகர மை தீட்ட வேண்டும் ..!
ஒப்பனை ..வாழ்வியலோடு இரண்டறக்கலந்தது ..
நன்றி ..!

