காற்றாட்டு வெள்ளம் 555
ஆற்றுவெள்ளம்.....
சல சலவென ஓடும்
காற்றாட்டு வெள்ளம்...
சிலுசிலுவென தன்னை இணைதோடும்
வயலின் நீர் துளிகள்...
நீரின் வேகத்திற்கு ஏற்ப
தன்னை சாய்ந்து
கொடுக்கும் நாணல்கள்...
நாணலோடு நாணலாய்
தன்னையும் சேர்த்து ஊஞ்சல் ஆடும்...
பூஞ்செடிகள்...
கீச் கீச் சப்தத்தோடு சிட்டு குருவிகள்...
கண்ணில் படாமல் காதுகளுக்கு ரம்மியமாக இசைகள் கூவும் குயில்கள்...
கரை ஓர பூமரங்கள் தன்னோடு அழைத்துக்கொண்டு...
பூமரங்கள் கரை ஒதுங்குமா
என காத்திருக்கும்...
சின்னஞ்சிறுவர்கள் கூட்டம்...
ஆற்றங்கரை செடி கொடிகளை
தழுவியும் தன்னோடும்
அழைத்து கொண்டு செல்கிறது...
இருகரை ஆற்றுவெள்ளம்
ஓடிவர...
வேகமாக செல்லும் ஆற்றுவெள்ளம்...
அகடுகளை முகடாகவும்...
முகடுகளை அகடாகவும்
மாற்றி செல்கிறது...
உன்னோடு வர நினைபவர்களை
அன்பாகவும் அதிகாரமாகவும்...
எதிர்பார்ப்பே இல்லாமல் செல்லும் ஆற்றுவெள்ளம் ஒரு இடத்தில்...
சங்கமிக்கும் இடம்
தான் ஆழ்கடல்...
எல்லை இல்லா கடற்பரப்பில்
தினந்தோறும் கரை புரண்டு...
அலைகளாக சங்கமிக்கும்
ஆழ்கடல்...
காற்றாட்டு வெள்ளமும்
ஆழ்கடலே.....

