ஒரே நிறம்
ஓரக்கண்ணில் ஒட்டவைத்த கண்ணீர்
ஊருக்கு ஒரு நியாயம்
இவரைச் சுற்றி விழும்
நிரந்தரமில்லா இறைச்சிக் கூடுகள்
ஆட்டிப்படைப்பது ஆட்டமாகியிருக்கிறது
போட்டியில் கூட்டம் சேர்த்தவரெல்லாம்
அதிசயமான மனிதன் முதல் பிறப்பறியான்
தன் இனம் அழிக்கும் முதல் பிறப்பானான்
யார் சொல்லை யார்கேட்பது
மரணம் வழங்குபவன் மனிதனாகிறான்
அண்டங்கள் அபிரிமிதமாய்
ஆராய ஆசையில்லை
ஓட்டுச் சட்டியில் திகட்டாத ஆசையுடன்
தினமும் ஒரு புதுத் தொல்லை
கூடவந்தவன் குறையாகிறான்
குரைத்தவன் குணவானாக
அன்பு அழியும் தருணம்
தாகம் தீர்த்த தண்ணீரோ காசுக்கு
காற்றைப் புட்டியிலடைக்க
இங்கும் சிலர் போட்டியில்
மனித வெறியாட்டம்
மதத்தின் பெயரில்
ஓடும் குருதி ஒட்டாது போகிறது
மனித குற்றங்களின் சாட்சியாய்
-இப்படிக்கு முதல்பக்கம்