பிணக்கம்
ஆடிவந்த வழியெல்லாம்
தோண்டித் தோண்டி எடுத்துவிட்டார்
ஆடிவரும் நேரத்திலே
என் நிறத்தை மாற்றபோட்டியிட்டார்
நான் போகும் வழியெல்லாம்
என் பிள்ளை வயல் இருக்குதடா
நான் வந்த வழி ஒன்றே
உன் வாழ்வின் ஆதாரமடா
தாகம் தீர்க்க வந்தவளை
நீதி மன்றத்தில் ஏற்றிவிட்டீர்
பிள்ளை நீதி கண்டு தினம்
அன்னை மடி வற்றிப் போகுதடா....
-இப்படிக்கு முதல்பக்கம்