சே குவேர - ஒரு மாமனிதன் ..2 ( கவிதை திருவிழா )

சே குவேரா ...!

ஒரு முறை .....
மனதார சொல்லிப்பாரும் ...
இதயத்தில் ..இனம்புரியாத ..
பிரளயம் வெடிக்கும் ...!
அவன் இனமில்லா போராளி ... ?!
அவன் வரலாறு அறியாதவன் கூட
அவன் முகம் தாங்கிய உடை அணிகிறான் ..!
அவன் ..வரலாற்று வரம்புகளை ..
உடைத்தெறிந்த உன்னதமான மனிதபோராளி ..!
தாய் நாட்டு கொடியை கூட ஏந்த மறுத்த
எத்தர்கள் எத்தனையோ பேர் நம் நாட்டில் ... ?
மாற்றான் மண்ணுக்கு ...
புரட்சி கொடி ஏந்திய புனிதன் ... அந்தவகையில் இவன் மகாத்மாவுக்கு மகாத்மா ...!!!
உலகில் இனப்பேராளிகளுக்குள்...இவன்தான்
நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் ...!
வாய்பேச்சு வீணர்கள் மத்தியில் ..இவன்
தன் வாழ்வையும் விடுதலைக்காக ...
விலையாய் கொடுத்த வீரத்திருமகன்..!
பிடல் கேஸ்ட்ரோ..க்கு ஒரு " சே குவேரா "
கிட்டியது போல் எம்தலைவன் ....
பிரபாகரனுக்கும் ..கிட்டாமல் போனதுதான் ...
இன்னும் விடுதலை ...
கிட்டாமல் இருப்பதற்கு காரணமோ ..?
எம் தலைவனை சுற்றி எட்டப்பர்கள் பலர்...
பாவம் அவர் என் செய்வார் ...?
ஆஸ்துமா அலைகளித்தும் இவன் அசரவில்லை ..
ஆடம்பரங்கள் அழைத்தும் இவன் அசையவில்லை.
யார் யாருக்கோ போராடி போராடி ...
புரட்சி தீ வளர்த்தான் ...இவனுக்கும் முடிவுரை
வழக்கம் போல் எட்டப்பர்களாலே ....!?
அன்றே ஒருவன் விளித்தது போலே ...
" புரட்சியாளன் புதைக்கபடுவதில்லை ...
விதைக்கப்படுகிறான் " என்று .....!
முளைக்கும் போதே ...மண்ணை தகர்த்தெறிந்து
முளைவிடும் ...விடுதலையின் புரட்சி விதை !
சே குவேரா..வும் , பிரபாகரனும் ...நேதாஜியும்
ஏன் இன்னும் சொல்லப்படாத பல ...
புரட்சியாளர்களும் வஞ்சகத்தால் ...மட்டுமே
தோற்கடிக்கபட்டார்கள்...!
உலக வரலாறு ...வஞ்சகத்தின் ....
ரத்தக்கறை படிந்த பாவ ஏடுகள் ....!
புரட்டிப்பாருங்கள் ...ஒவ்வொரு பக்கத்திலும்
ஒரு புரட்சி விதை ...
ரத்தம் சிந்தியே விதைக்கபட்டிருக்கும்...!
வீழ்வோம் ஒரு நாள் ......அது
பிறர் சுதந்திரமாய் வாழ்வதற்காக இருக்கட்டுமே ..?!
வாழ்க சே குவேரா...வாழ்க வீரம் ...!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (6-Jun-12, 3:58 pm)
பார்வை : 248

சிறந்த கவிதைகள்

மேலே